--- --:--:-- --

பிரசவித்த பெண்ணின் வயிற்றில் ஊசி வைத்து தைத்ததால் பலியான சோகம்..!

3

ஞ்சை அரசு மருத்துவமனையில் கர்ப்பிணிப் பெண்ணுக்கு அறுவை மருத்துவத்தின் போது ஊசையை வயிற்றில் வைத்து தையல் போட்ட நிலையில் அதை அகற்ற மேற்கொள்ள முயன்றபோது அவர் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

 

தஞ்சை மாவட்டம் பாபநாசம் தாலுக்கா இளங்காடு கிராமத்தில் வசித்து வரும் இணையர் விஜயகுமார், லட்சுமி. இவரது இரண்டாவது மனைவி கருவுற்ற நிலையில் பிரசவத்திற்காக செப்டம்பர் மாதம் தஞ்சை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார்.

 

கர்ப்பிணிப் பெண்ணுக்கு அறுவை மருத்துவம் மூலம் ஆண் குழந்தை பிறந்தது. பிரசவத்திற்குப் பின்னரும் உடல் நலம் பாதிக்கப்பட்ட லட்சுமியை அரசு மருத்துவமனை முறையாக கவனிக்காததால் தனியார் மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளனர்.

 

அங்கு லட்சுமியை பரிசோதித்த மருத்துவர்கள் அறுவை மருத்துவம் செய்த போது வயிற்றினுள் ஊசி ஒன்றை வைத்து தைத்துவிட்டதாக தெரிவித்தனர்.

 

இதனையடுத்து மீண்டும் அரசு மருத்துவமனைக்கு அழைத்து வர விஜயகுமாரிடம் அரசு மருத்துவமனை செவிலியர்கள் மற்றும் மருத்துவர் அறிவுறுத்திய நிலையில் அவர் உடல்நிலை மோசமானதால் அவர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில் அங்கு அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

 

இதனால் அதிர்ச்சி அடைந்த அரசு மருத்துவமனை நிர்வாகம் உயிரிழப்பு குறித்து பிரச்சனை செய்ய மாட்டோம் என எழுதி வாங்கிவிட்டு உடலை ஒப்படைத்ததாக கூறப்படுகிறது.

Right Menu Icon