நாளை முதல் புறநகர் ரயில் சேவைகளில் பொதுமக்கள் பயணம் செய்யலாம்..!
சென்னையில் நாளை முதல் புறநகர் ரயில் சேவைகளில் பொதுமக்கள் சில கட்டுப்பாடுகளுடன் பயணம் செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளது. கொரொனா தொடர்பான கட்டுப்பாடுகள் காரணமாக சென்னை புறநகர் ரயில்களில் முன்களப் பணியாளர்கள் மற்றும் அரசு ஊழியர்கள் மட்டும் தற்போது அனுமதி அளிக்கப்படுகிறது.
இந்த நிலையில் நாளை முதல் சில கட்டுப்பாடுகளுடன் பொதுமக்களும் புறநகர் ரயில்களில் பயணிக்கலாம் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. அதன்படி பெண்களும், 12 வயதிற்குட்பட்ட குழந்தைகள், பெண்களுடன் இணைந்து 24 மணி நேரமும் பயணிக்கு அனுமதிக்கப்பட்டுள்ளது.
காலை 7:00 மணி வரையிலும், காலை 9.30 மணி முதல் மாலை 4.30 வரையிலும், பின்னர் இரவு ஏழு மணிக்கு பிறகும் அனுமதிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
எக்ஸ்பிரஸ் ரயிலில் முன்பதிவு செய்து பயணிப்பவர்கள் ரயிலுக்கு செல்வதற்காகவும் பயணம் முடித்து திரும்பவும் ஒருமுறை மட்டும் புறநகர் ரயிலில் பயணிக்கலாம் என கூறப்பட்டுள்ளது. மேலும் முன் களப்பணியாளர்கள் மற்றும் பெண்களுக்கு சீசன் டிக்கெட் வழங்கப்படும் எனவும் தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.






