--- --:--:-- --

ஜூலை 31ஆம் தேதிக்குள் +2 ரிசல்ட்டை அறிவிக்க வேண்டும்..!

6

பிளஸ் 2 மாணவர்களுக்கான மதிப்பீட்டு முறையை 10 நாட்களுக்குள் வகுத்து ஜூலை 31-ஆம் தேதிக்குள் முடிவுகளை அறிவிக்குமாறு மாநிலங்களுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

 

கொரொனா பரவல் அதிகரித்த சூழ்நிலையில் மாணவ மாணவிகளின் பாதுகாப்பு கருதி சிபிஎஸ்சி பிளஸ் டூ தேர்வுகள் ரத்து செய்யப்பட்டன. தேர்வுகள் ரத்து செய்யப்பட்டாலும் மாணவர்களுக்கு மதிப்பெண் வழங்கும் மதிப்பீட்டு முறையை உருவாக்கி அதற்கு உச்சநீதிமன்றத்திலும் சிபிஎஸ்சி ஒப்புதல் பெற்றது.

 

இதனிடையே 21 மாநில அரசுகளும் பிளஸ்-2 தேர்வுகளை ரத்து செய்தன இந்த மாநிலங்கள் பிளஸ் டூ தேர்வு மதிப்பீட்டு முறையை 10 நாட்களுக்குள் இறுதி செய்து ஜூலை 31-ஆம் தேதிக்குள் முடிவுகளை அறிவிக்கும் 6 பிளஸ் டூ தேர்வு தொடர்பான வழக்கில் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

 

Leave a Reply

Right Menu Icon