வளைவில் திரும்பிய தனியார் பேருந்து.. அதிவேகத்தால் நேர்ந்த சோகம்..!
கர்நாடக மாநிலம் தட்சிண கனடா மாவட்டத்தில் தனியார் பேருந்து வளைவு ஒன்றில் அதிவேகமாக திரும்பிய பொழுது படிக்கட்டில் நின்று கொண்டிருந்த நடத்துனர் கீழே விழுந்து உயிரிழந்த சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது.
பேருந்தில் சென்று கொண்டிருந்தபோது நடைபெற்றதை அங்கு இருந்த கேமராவில் பதிவாகியுள்ளது. காயமடைந்த நிலையில் போக்குவரத்து காவல்துறை அதிகாரி ஒருவர் அவரை மீட்டு அருகில் இருந்த மருத்துவமனைக்கு அழைத்து சென்றார். பரிசோதித்த மருத்துவர்கள் அவர் முன்பாகவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.





