அதிரடியாக குறைந்தது தங்கம் விலை..!
புத்தாண்டு தொடங்கியதில் இருந்தே தங்கம் விலை அதிகரித்து அதிரடி காட்டி வருகிறது. நாளுக்கு நாள் சிறுக சிறுக உயர்ந்து வந்த தங்கம் விலை கடந்த சில தினங்களாக அதிரடியாக உயர்ந்து புதிய உச்சத்தை தொட்டு வருகிறது. இதில் புதிய உச்சமாக தங்கம் ஒரு கிராம் விலை ரூ.15,000 ஐ கடந்துள்ளது.
தங்கத்தின் விலை இப்படி ராக்கெட் வேகத்தில் உயர சில முக்கியமான உலகளாவிய காரணங்கள் உள்ளன. ஈரான், வெனிசுலா போன்ற நாடுகளில் நிலவும் போர்ச்சூழல் மற்றும் ரஷ்யா-உக்ரைன் போர் இன்னும் முடிவுக்கு வராதது உலகப் பொருளாதாரத்தில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.
அந்த வகையில் நேற்று (ஜனவரி 26) 22 காரட் தங்கம் விலை கிராமுக்கு மட்டுமே ரூ.275 உயர்ந்து ஒரு கிராம் ரூ.15,025 க்கும், சவரனுக்கு ரூ.2,200 உயர்ந்து ஒரு சவரன் ரூ. 1,20,200க்கும் விற்பனை செய்யப்பட்டது.mதொடர்ந்து இன்று (ஜனவரி 27) தங்கம் விலை அதிரடியாக குறைந்துள்ளது நகை பிரியர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அதன் படி 22 காரட் தங்கம் விலை கிராமுக்கு ரூ.65 குறைந்து ஒரு கிராம் ரூ.14,960க்கும், சவரனுக்கு ரூ.520 குறைந்து ஒரு சவரன் ரூ.1,19,680க்கும் விற்பனை செய்யப்படுகிறது.அதே போல, 18 காரட் தங்கம் விலையும் கிராமுக்கு ரூ.25 குறைந்து ஒரு கிராம் ரூ.12,475க்கும், சவரனுக்கு ரூ.200 குறைந்து ஒரு சவரன் ரூ.99,800க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
வெள்ளி விலை மீண்டும் அதிரடியாக உயர்ந்து புதிய உச்சத்தை தொடுள்ளது. கிராமுக்கு ரூ.12 உயர்ந்து ஒரு கிராம் ரூ.387க்கும், கிலோவுக்கு ரூ.12,000 உயர்ந்து ஒரு கிலோ ரூ.3,87,000க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




