தமிழகத்தை உலுக்கிய பெரம்பலூர் ரவுடி அழகுராஜா என்கவுண்டர்..!
பெரம்பலூரில் ரடிவு வெள்ளைக்காளியை கொலை செய்ய முயன்ற வழக்கில் கைதான அழகுதுரை போலீசாரை வெட்டி விட்டு தப்பி ஓட முயன்ற சுட்டுக்கொலை செய்யப்பட்டுள்ளார். மதுரையை சேர்ந்த பிரபல ரவுடி வெள்ளை காளியை வழக்கு விசாரணைக்காகப் புதுக்கோட்டை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய போலீசார் பின்னர் அவரை பலத்த போலீஸ் பாதுகாப்புடன் சென்னைக்கு அழைத்து சென்றுள்ளனர்.
திருச்சி – சென்னை தேசிய நெடுஞ்சாலையில் பெரம்பலூர் திருமாந்துறை டோல்கேட் அருகே வண்டியை நிறுத்தி ஹோட்டலில் உணவருந்தினார்.
உணவகத்தின் வெளியே போலீசார் காவலில் நின்று கொண்டிருந்தனர். அப்போது திடீரென்று இரு கார்களில் வந்த கும்பல், உணவகத்தின் மீது அடுத்தடுத்து 3 பெட்ரோல் குண்டுகளை வீசியது. தொடர்ந்து அவர்கள் மறைத்து வைத்திருந்த அரிவாளை எடுத்து வெள்ளைக்காளியை வெட்டுவதற்கும் முயற்சி செய்துள்ளனர்.
உடனே அலர்ட்டான எஸ்ஐ ராமச்சந்திரன் மர்ம நபர்களை நோக்கி துப்பாக்கிச்சூடு நடத்த அவர்கள் மின்னல் வேகத்தில் அங்கிருந்து கார்களில் தப்பினர். வெடிகுண்டு வீசியதில் ரவுடி வெள்ளை காளிக்கு பாதுகாப்பாக வந்த போலீசாரில் மருதுபாண்டி என்பவருக்கும் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. இச்சம்பவத்தில் வெள்ளைக்காளி உயிருடன் காப்பாற்றப்பட்டார்.
\
இந்நிலையில் போலீசார் மீது தாக்குதல் நடத்தி தப்பி சென்றவர்களை பிடிக்க தனிப்படை அமைத்து போலீசார் தேடிவந்தனர். திருமாந்துறையில் இருந்து கடலூர் மாவட்டம் ஒரத்தூர் வழியாக காரில் சீறிப்பாய்ந்த கும்பலை, போலீசார் பின் தொடர்ந்து சென்றனர். ஒரத்தூர் சுங்க சாவடியில் நிற்காமல் சென்ற கார், தடுப்புகளை மோதிவிட்டு மின்னல் வேகத்தில் சென்றனர்.
கடலூர் மாவட்டம் முழுக்க அலர்ட் விடுக்கப்பட்டு ஒட்டுமொத்த போலீசாரும் களத்தில் இறங்க, கடலூர் மாவட்டம் எழுத்தூர் அருகே இரு கார்களின் ஒன்றை ஓரமாக நிறுத்தி விட்டு தப்பித்துள்ளனர். அக்காரை திட்டக்குடி போலீசார் கைப்பற்றி விசாரணை நடத்தினர்.
பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த சம்பவத்தில் 5 தனிப்படைகளை அமைத்த பெரம்பலூர் மாவட்ட போலீசார் குற்றவாளிகளை வலை வீசி தேடி வந்த நிலையில் அழகுராஜா என்பவரை நேற்று மாலை கைது செய்து சம்பவம் நடைபெற்ற இடத்திற்கு அழைத்து வந்துள்ளனர். அப்பொழுது அவர்கள் பயன்படுத்திய ஆயுதங்கள் மற்றும் நாட்டு வெடிகுண்டுகளை வனப்பகுதியில் பதுக்கி வைத்திருப்பதாக அழகுராஜா தெரிவித்துள்ளார்.
அதனைத்தொடர்ந்து ஆயுதங்களை கைப்பற்றுவற்காக போலீசார் அழைத்துச் சென்றுள்ளனர். அப்போது திடீரென, போலீசார் வாகனத்தின் மீது நாட்டு வெடிகுண்டு ஒன்றை வீசிய அழகுராஜா தான் மறைத்து வைத்திருந்த அறிவாளால் எஸ்.ஐ சங்கர் என்பவரை வெட்டிவிட்டு தப்பி ஓட முயன்றுள்ளார்.






