--- --:--:-- --

ஒரு சிலிண்டரின் விலை 5 ஆயிரம் ரூபாயா..!

2

ரு சிலிண்டரின் விலை 4 ஆயிரத்து 800 ரூபாய் முதல் 5,000 ரூபாய் வரை விற்பதாக அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் தேர்தல் பிரச்சாரத்தில் தெரிவித்தது சிரிப்பலையை ஏற்படுத்தியுள்ளது. பிரச்சாரத்தின்போது 5000 ரூபாய் வரை உள்ள சிலிண்டரை வருடத்திற்கு 6 இலவசமாக முதலமைச்சர் தர உள்ளதாக கூறினார்.

 

அய்யன்குளம் பகுதியிலும் பிரச்சாரத்தில் ஈடுபட்ட அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசனை சூழ்ந்துகொண்ட பொதுமக்கள் 50 ஆண்டுகளுக்கு மேலாக இந்த பகுதியில் வசிக்கும் தங்களுக்கு வீட்டுமனைப்பட்டா வழங்க வேண்டும் என வலியுறுத்தினர்.

 

அனைவருக்கும் குடிசை மாற்று வாரியத்தின் மூலம் வேறு இடத்தில் வீடு கட்டித் தரப்படும் என அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் உறுதியளித்துள்ளார்.

Leave a Reply

Right Menu Icon