--- --:--:-- --

சாலையில் அடித்துக் கொண்டு உருண்ட காவலர்கள்..!

5

பீகாரில் பொதுமக்கள் முன்னிலையில் இரண்டு காவலர்கள் சாலையில் சண்டையிட்ட காட்சிகள் வெளியாகியுள்ளன. பீகார் மாநிலம், நாலந்தா மாவட்டத்தில் முக்கிய சாலையில் காவல்துறையினர் வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.

 

வாகன சோதனையின் பொழுது பொதுமக்களிடம் லஞ்சம் வாங்கிய காவலரை சக காவலர் தட்டி கேட்டதாக கூறப்படுகிறது. இதனால் இருவருக்கும் இடையே வாய் தகராறு ஏற்பட்டு கைகலப்பாக மாறி உள்ளது.

 

இரண்டு காவலர்களும் சாலையில் ஒருவரை ஒருவர் தாக்கி கொண்ட பரபரப்பு ஏற்பட்டது. இது தொடர்பான காட்சிகள் தற்பொழுது வெளியாகி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

 

Right Menu Icon