16 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை..!
சேலம், விழுப்புரம் உள்ளிட்ட 16 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. தமிழ்நாட்டில் நீடித்து வரும் வெயிலின் காரணமாக வெப்ப சலனம் ஏற்பட்டு இடி, மின்னலுடன் கூடிய மழை பெய்து வருகிறது.
தமிழ்நாட்டின் நிலவும் வெப்பச்சலனம் காரணமாக வரும் 21ஆம் தேதி வரை பல்வேறு மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய மழை பெய்யும் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது.
அதன்படி சேலம், தர்மபுரி, கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், விழுப்புரம், நாமக்கல் உள்ளிட்ட 16 மாவட்டங்களில் இன்று இடி மின்னலுடன் கூடிய மழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.





