திருவாடானை அருகே ராணுவ வீரர் பழனியின் குடும்பத்தாருக்கு காவல்துறையினர் நிதியுதவி
ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை தாலுகா கடுக்கலூர் கிராமத்தைச் சேர்ந்த ராணுவ வீரர் பழனி இந்திய எல்லைப்பகுதியில் சீன ராணுவத்தினரால் தாக்கப்பட்டு வீரமரணம் அடைந்தார். இவரது குடும்பத்தாருக்கு திருச்சி காவலர் பயிற்சி பள்ளி 1997ஆம் ஆண்டு முதல் பேஜ்ஜில் காவலர்கள் பயிற்சி பெற்று 5000 ஆண், பெண் காவலர்கள் தமிழகம் முழுவதும் பல்வேறு நிலையங்களில் பல்வேறு பதவிகளில் பணியாற்றி வருகிறார்கள்.
இவர்கள் 1997 ஆம் ஆண்டு முதல் பேஜ் என வாட்ஸ்அப் குமு ஒன்று ஆரம்பித்து அதன் மூலம் பாதிக்கப்பட்ட காவல் துறையினருக்கு தாங்களாக முன்வந்து நிதி வழங்கி வந்தார்கள். தமிழகத்திலேயே முதல் முறையாக காவல்துறையினர் இறந்த ராணுவ வீரருக்கு நிதி வழங்குவது இதுவே முதல் முறையாகும். திருச்சி காவலர் பயிற்சி பள்ளியில் 1997 ஆம் ஆண்டு முதல் பேஜ் காவலர் பயிற்சி முடித்த தற்போது தலைமை காவலராக உள்ள ராஜேஸ்கண்ணன், முன்னாள் இராணுவ வீரர் கேப்டன் அருள்சாமி மற்றும் காரைக்குடியை சேர்ந்த காவலர் ரவி ஆகியோகள் பழனியில் சமாதிக்கு மலர் மாலை அணிவித்து வீரவணக்கம் செலுத்திய அஞ்சலி செலுத்தினர்.

அதனை தொடர்ந்து பழனியின் குடும்பத்தாருக்கு ஆறுதல் கூறி தங்களது சொந்தப் பணத்திலிருந்து ரூபாய் ஒரு லட்சத்தி 18 ஆயிரம் ரொக்க தொகையை அவரது குடும்பத்தாருக்கு வழங்கினார்கள். இதுபோன்ற ராணுவ வீரர்களுக்கு காவல் துறையினர் தங்களது சொந்த பணத்தை வழங்கி உதவி செய்வது இதுவே முதல் முறை என்றும் தெரிவித்தார்கள். பாதிக்கப்பட்ட ராணுவ வீரருக்கு தமிழக காவல்துறை உதவி செய்வது மூலம் ஒரு நல்லுறவை ஏற்படுத்தும் விதமாகவே நிதியுதவி அளிப்பதாக கூறினார்கள்.






