லீவு கேட்டால் கொடுப்பதில்லை என வீடியோ வெளியிட்ட போலீஸ் இன்ஸ்பெக்டர்..!
மதுரையில் பெண் காவலர் லீவு தர மறுப்பதாக குற்றம் சாட்டி வீடியோ வெளியிட்ட சிறப்பு உதவி ஆய்வாளர் ஒருவர் சுமார் 2 மணி நேரத்திற்கு பின் மன உளைச்சலில் வீடியோ வெளியிட்டு விட்டதாக கூறி மன்னிப்பு கூறியுள்ளார்.
செல்லூர் குற்றப்பிரிவு எஸ்ஐ ஆக பணியாற்றி வரும் ஸ்டாலின் அப்பன் ராஜ் வெளியிட்ட வீடியோவில் தனது சகோதரியின் மகள் திருமணத்தை தாய்மாமன் என்ற முறையில் பங்கேற்க லீவு கேட்டால் கூட தர மறுக்கிறார்கள் என கூறி இருந்தார்.
இந்த வீடியோ வெளியிட்ட 2 மணி நேரத்தில் தனக்குதீவு கிடைத்துவிட்டதாக கூறிய மன்னிப்பு கேட்டு மற்றொரு வீடியோவையும் ஸ்டாலின் அப்பன் ராஜ் வெளியிட்டார்.






