போராடிய மாணவர்கள் மீது போலீசார் தடியடி..!
நீட் தேர்வு வினாத்தாள் கசிவு & முறைகேடுகளை கண்டித்து ராஜஸ்தான் மாநிலம் கோட்டாவில் போராட்டம் நடத்திய காங்கிரஸார் மீது அம்மாநில போலீசார் தடியடி நடத்தியுள்ளனர்.
நீட் தேர்வு பயிற்சி மையங்கள் அதிகம் உள்ள கோட்டாவில், காங்., மாணவர் அமைப்பினர் ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். போராட்டத்தில் ஈடுபட்டவர்களை போலீசார் தடியடி நடத்தியும், நீரை பீய்ச்சி அடித்தும் விரட்டி அடித்தனர்.





