விண்ணை அதிர வைத்த விமானம்…பீதியில் மக்கள்..!
திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில் பயங்கர வெடி சத்தம் கேட்டதால் அந்த பகுதி மக்கள் பீதி அடைந்தனர். இந்த சப்தம் தாராபுரம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகள் என சுமார் 30 கிலோ மீட்டர் தூரத்திற்கு கேட்டுள்ளது. மேலும் வானில்மேகத்தை இடித்துக் கொண்டு விமானம் ஒன்று சென்றதற்கான அடையாளங்கள் தென்பட்டுள்ளது.
இதனால் விமானம் விபத்துக்குள்ளாகி விட்டதாக அந்த பகுதி மக்களிடையே வதந்தி பரவியுள்ளது. பின்னர் இது குறித்து விசாரித்ததில் சூலூர் விமானப்படைத் தளத்தில் உள்ள சூப்பர் சோனிக் விமானங்களை கொண்டு விமானப்படை பயிற்சி மேற்கொண்டது. அதிலிருந்து எழுந்த சத்தம் போல் கேட்டது தெரியவந்தது.






