தனது மனைவியுடன் தவறான தொடர்பில் இருந்த நண்பனை குத்தி கொலை செய்த நபர்..!
தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே முன்விரோதத்தில் சக நண்பனை கத்தியால் குத்தி கொலை செய்தவரை போலீசார் தேடி வருகின்றனர். சருத்துப்பட்டியை சேர்ந்த விஷாகன் என்பவர் அவரது நண்பர் சரவணனின் மனைவியுடன் தவறான தொடர்பில் இருந்ததாக கூறப்படுகிறது.
இது தொடர்பாக இருவருக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்த நிலையில் அந்த பகுதியில் உள்ள கடையில் வைத்து இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த சரவணன் விஷாகனை கத்தியால் குத்தி கொலை செய்துவிட்டு தப்பிச் சென்றார்.







