--- --:--:-- --

வெள்ளிக்கிழமை முதல் ஆம்னி பேருந்துகள் இயக்கப்படும்..!

8

வெள்ளிக்கிழமை முதல் ஆம்னி பேருந்துகள் இயக்கப்படும் என தனியார் பேருந்துகள் சங்கத்தின் பொதுச்செயலாளர் அன்பழகன் தெரிவித்துள்ளார். கொரொனா பொது முடக்கம் அமல்ப்படுத்தப்பட்டதில் இருந்தே கடந்த ஆறு மாதங்களாக ஆம்னி பேருந்துகள் இயக்கப்படவில்லை.

 

பொது போக்குவரத்திற்கான தடையை தமிழக அரசு நீக்கிய போதும் சாலை வரியில் இருந்து விலக்கு அளிக்க கோரிக்கை விடுத்து வந்த தனியார் பேருந்து உரிமையாளர்கள் பேருந்துகளை இயக்கவில்லை. இந்நிலையில் வெள்ளிக்கிழமை முதல் ஆம்னி பேருந்துகள் சேவை தொடங்கப்படும் என தனியார் பேருந்துகள் சங்கத்தின் பொதுச்செயலாளர் அன்பழகன் தெரிவித்துள்ளார்.

 

முதற்கட்டமாக 500 பேருந்துகள் இயக்கப்படும் என்றும் பயணிகளின் வருகைக்கு ஏற்ப பேருந்துகளின் எண்ணிக்கை அதிகரிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Right Menu Icon