அந்தரங்க புகைப்படங்களை வைத்து மிரட்டி பெண்களை பாலியல் வன்கொடுமை செய்த நபர்..!
அந்தரங்க புகைப்படங்களை வைத்து மிரட்டி பெண்களை பாலியல் வன்கொடுமை செய்து வந்த நபர் மீது காவலர்கள் வழக்கு பதிவு செய்துள்ளனர். கூடா நட்பு கேடாய் முடியும் என்பதை நிரூபிக்கும் விதமாக சென்னையில் நடந்துள்ளது மற்றுமொரு பாலியல் வன்கொடுமை சம்பவம்.
இந்த விவகாரத்தில் பாதிக்கப்பட்டிருக்கும் பெண்ணுக்கு வயது 32. திருமணமாகி ஒன்பது ஆண்டுகள் ஆகிறது. எட்டு வயது மகன் மற்றும் மூன்று வயது மகளுக்கு தாயான இவர் தற்போது பெரும் சிக்கலில் மாட்டித் தவித்துக் கொண்டிருக்க காரணம் அவரது நண்பர் ரத்தினகுமார்.
காப்பீட்டு நிறுவனத்தை நடத்தி வரும் அந்த பெண்ணுக்கு கணவருடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது. இதனால் மன உளைச்சலுக்கு ஆளான அந்த பெண் தனது நிறுவனத்தில் பணியாற்றும் ரத்தினகுமார் என்பவருடன் குடும்ப விவகாரங்களை பகிர்ந்து கொண்டு ஆறுதல் தேடியுள்ளார்.
இருவருக்கும் இடையேயான நெருக்கம் அதிகரித்தது. அவ்வளவுதான் அதுவரை நல்லவர்கள் போல் நடித்து வந்த ரத்தினகுமாரின் விசுவரூபம் அப்போது தான் வெளிப்பட்டுள்ளது. அந்தப் பெண் கூறிய அந்தரங்க தகவல்களை அவரது கணவரிடம் சொல்லி விடுவதாகக் கூறி மிரட்டத் தொடங்கிய ரத்தினகுமார் தன்னை பலமுறை பாலியல் வன்கொடுமை செய்ததாக கூறி புகார் அளித்துள்ளார்.
பாதிக்கப்பட்ட அந்த பெண் நெருக்கமாக பழகிய போது எடுத்த புகைப்படங்களையும் வீடியோக்களையும் சமூக வலைதளங்களில் பதிவிட்டு விடுவதாக கூறி அந்தப் பெண்ணை துன்புறுத்தியுள்ளார் ரத்தினகுமார்.
இதுகுறித்த புகாரில் விசாரணை நடத்திய போது தான் அவர் மேலும் சில பெண்களிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபடுவது தெரியவந்துள்ளது. இது தொடர்பாக 6 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்துள்ள காவல்துறையினர் தலைமறைவான அவரை தேடி வருகின்றனர்.






