ஆந்திராவில் கோவில் மண்டபத்தில் கிடைத்த தங்க, வெள்ளி புதையல்..!
ஆந்திர மாநிலம் கர்னூல் மாவட்டத்தில் பழங்காலத்தைச் சேர்ந்த 15 தங்க நாணயங்கள் மற்றும் 18 வெள்ளி நாணயங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. அங்குள்ள சைலம் கோவில் அருகே இருந்த பழமையான கண்டா மண்டபம் பழுதடைந்ததை தொடர்ந்து அதனை இடிக்கும் பணிகள் நடைபெற்றன.
அப்போது மண்டபத்தில் இருந்த தண்ணீர் தொட்டியில் 15 தங்க நாணயங்கள், 18 வெள்ளி நாணயங்கள் மற்றும் ஒரு தங்க மோதிரம் இருந்ததை அடுத்து போலீசார் மற்றும் வருவாய்த் துறையினர் அதனைப் பார்வையிட்டு பரிசோதனை செய்து வருகின்றனர்.






