--- --:--:-- --

காலைக்கடன் கழிக்க சென்ற முதியவர் யானை மிதித்து பலி..!

9

காலைக்கடன் கழிக்க வெளியில் வந்த முதியவர் காட்டு யானை தாக்கிக் கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நீலகிரி தேவாலம்பட்டியை சேர்ந்த 75 வயது பழனியாண்டி என்ற முதியவர் காலையில் காலை கடன் கழிக்க வீட்டின் முன்பிருந்த கழிப்பறை கதவை திறந்து உள்ளார்.

 

அப்பொழுது வீட்டின் முன்பாக நின்றிருந்த ஒற்றை காட்டு யானை கடுமையாக தாக்கியதில் பழனியாண்டி சம்பவ இடத்திலேயே பலியானார். கோபம் குறையாத அந்த யானை அருகில் நிறுத்தப்பட்டிருந்த அவர்களின் காரையும் சேதப்படுத்தியது. தற்பொழுதும் அந்த யானை அதே பகுதியில் ஆத்திரத்துடன் உலா வருவதால் பொதுமக்கள் அச்சம் அடைந்துள்ளனர்.

 

Right Menu Icon