விரக்தியில் அடையாற்றில் குதித்த நபர் சடலமாக மீட்பு..!
சென்னை அடையார் மேம்பாலத்தில் இருந்து அடையாற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்ட நபரின் உடலை தீயணைப்பு துறையினர் போராடி மீட்டனர். சென்னை அடையாறு மருத்துவமனை அருகே 40 வயது மதிக்கத்தக்க நபர் ஒருவர் மேம்பாலத்திலிருந்து அடையாற்றில் குதித்துள்ளார்.
இது தொடர்பாக பொதுமக்கள் போலீசருக்கு தகவல் அளித்ததன் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு தீயணைப்புத் துறை நிர்வாக உதவியுடன் சடலமாக மீட்டனர். இதன் முதற்கட்ட விசாரணையில் தற்கொலை செய்து கொண்ட நபர் அடையாறு கேனால் சாலையில் இருந்த ஆட்டோ ஓட்டுனர் ராஜேஷ்குமார் என்பது தெரிய வந்தது.
அவருக்கு திருமணம் ஆகி ஒரு குழந்தை உள்ள நிலையில் சற்று மனநலம் பாதிக்கப்பட்டிருந்ததாக போலீசார் தெரிவித்துள்ளனர்.





