--- --:--:-- --

ரேஷன் வாங்குபவர்களுக்கு ஓராண்டு இலவச ரேஷன்..!

7

தேசிய உணவு பாதுகாப்பு சட்டத்தின் கீழ் நாடு முழுவதும் ஏழை எளிய மக்களுக்கு ஓர் ஆண்டுக்கு இலவச ரேஷன் வழங்க மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. நாட்டில் உள்ள ஏழை எளிய மக்களுக்கு தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் உணவு பாதுகாப்பு சட்டத்தின் கீழ் மாதம்தோறும் நபர் ஒருவருக்கு ஐந்து கிலோ உணவு தானியங்கள் வழங்கப்படுகின்றன.

 

இதில் அரிசி கிலோ மூன்று ரூபாய்க்கும், கோதுமை இரண்டு ரூபாய்க்கு வழங்கப்படுகின்றன. மேலும் கொரோனா பரவலுக்கு பின் கொண்டுவரப்பட்ட பிரதமர் கரிஷ் கல்யாண் யோஜனா ஏழைகளுக்கான இலவச ரேஷன் திட்டமும் நடைபெற உள்ளன.

 

இந்த நிலையில் பிரதமர் மோடி தலைமையில் மத்திய அமைச்சரவை கூட்டம் நேற்று நடைபெற்றது. இதில் தேசிய உணவு பாதுகாப்பு சட்டத்தின் கீழ் 81.39 கோடி மக்களுக்கு ஓராண்டுக்கு இலவச ரேஷன் வழங்க ஒப்புதல் அளிக்கப்பட்டது.

 

இதன் மூலம் மத்திய அரசுக்கு ஆண்டுக்கு 2 லட்சம் கோடி ரூபாய் கூடுதலாக செலவாகும் என்று உணவுத்துறை அமைச்சர் பி.எஸ்.கோயல் தெரிவித்துள்ளார்.

 

Right Menu Icon