--- --:--:-- --

இன்று கடலோர மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு..!

9

மிழகத்தின் தென் மற்றும் டெல்டா மாவட்டங்களில் நாளை கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

 

தென்மேற்கு வங்க கடலில் நிலவும் காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக இன்று கடலோர மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

அதேபோல நாளை குமரி, நெல்லை, தேனி, தென்காசி, விருதுநகர் ஆகிய மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும் நாளையும், நாளை மறுநாளும் தூத்துக்குடியில் ராமநாதபுரம் சிவகங்கை, புதுக்கோட்டை, தஞ்சை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை ஆகிய மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.

 

இதனிடையே தென்மேற்கு வங்க கடல் மற்றும் அதனை ஒட்டிய இலங்கை கடற்கரை ஓரத்திலும், மன்னார் வளைகுடாவிலும் சூறைக்காற்று வீச கூடும் என்பதால் குறிப்பிட்ட பகுதிகளுக்கு மீனவர்கள் மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

 

Right Menu Icon