கொரோனா வார்டில் இருந்து தப்பி வந்ததாக கூறிய நபர்!
தஞ்சாவூர் மாவட்டத்தில் கொரொனாவில் இருந்து தப்பி வந்ததாக கூறிய நபரால் பரபரப்பு ஏற்பட்டது. மாடியில் உள்ள தற்காலிக காய்கறிச் சந்தையில் சந்தேகத்திற்கிடமான வகையில் ஒரு நபர் சுற்றித்திரிந்த தாக தெரிகிறது. அவரிடம் வியாபாரிகள் விசாரித்ததில் திருச்சியில் உள்ள கொரொனா வார்டில் சிகிச்சை பெற்று வந்ததாகவும் அங்கிருந்து தப்பி வந்ததாகவும் கூறியுள்ளார்.
இதனை கண்டு அதிர்ச்சியடைந்த வியாபாரிகள் காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். விரைந்து வந்த காவல்துறையினர் மற்றும் மாநகராட்சி அதிகாரிகள் அந்த நபரிடம் விசாரணை நடத்தியதில் அவர் காசாநாடு புதூர் பகுதியைச் சேர்ந்தவர் என்பது தெரியவந்தது. அவர் மனநலம் பாதிக்கப்பட்டவர் போல் காணப்பட்டதால் தஞ்சாவூர் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
தஞ்சையில் மாதாகோட்டை ஊராட்சியை சேர்ந்த மக்கள் பொது முடக்கத்தை கடைபிடிப்பது உடன் குறித்த விழிப்புணர்வையும் ஏற்படுத்தி வருகின்றனர் . கொரொனா வேடம் அணிந்து ஒருவர் அதை ஏற்படுத்தக் கூடிய பாதிப்புகளை சாலையில் செல்வோரிடம் செல்வோரிடம் எடுத்துரைத்தனர். சாலைகளில் கொரொனா குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
பொது மக்களுக்காக பணியாற்ற கூடிய தூய்மைப் பணியாளர்களுக்கு தேவையான அரிசி, பருப்பு உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களையும் தன்னார்வலர்கள் மூலம் ஊராட்சி நிர்வாகிகள் வழங்கினர். மேலும் பொதுமக்களுக்கு முக கவசம் மற்றும் கையுறை இலவசமாக வழங்கப்பட்டது. கொரொனா தடுப்பு நடவடிக்கையாக கிராமம் முழுவதும் கிருமி நாசினி தெளிக்கப்பட்டது.







