பேருந்தில் பாம்பை மாஸ்காக அணிந்த நபர்..!
இங்கிலாந்தின் மான்செஸ்டர் நகரில் கொரொனாவிலிருந்து பாதுகாக்க பாம்பையே மாஸ்காக அணிந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது. அங்கு கொரொனாவில் இருந்து பாதுகாக்க அனைவரும் முகக்கவசம் அணிய வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இந்த நிலையில் பேருந்து ஒன்றில் பயணம் செய்த பயணி ஒருவர் முகக்கவசம் அணிய மறந்துவிட்ட நிலையில் தான் கொண்டு சென்றிருந்த பாம்பையே மாஸ்காக பயன்படுத்தி பயணம் செய்துள்ளார். அவரது இந்த செயல் மற்ற பயணிகளுக்கு பயத்தை ஏற்படுத்தினாலும் ஒரு விழிப்புணர்வை ஏற்படுத்துவதாக அமைந்துள்ளது.






