கோலம் போட்டுக் கொண்டிருந்த பெண் அடித்துக் கொலை..!
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் வீட்டு வாசலில் கோலம் போட்டு இருந்த பெண் அடித்துக் கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. தென்பாதி பகுதியை சேர்ந்த அரசுப்பள்ளி ஆசிரியரின் மனைவியான சித்ரா என்பவர் அதிகாலையில் வீட்டு வாசலில் கோலம் போட்டுக் கொண்டிருந்தார்.
அப்போது அங்கு வந்த சிலர் அவரை தலையில் அடித்துக் கொலை செய்து விட்டு தப்பி சென்றதாக கூறப்படுகிறது. ரத்த வெள்ளத்தில் கிடந்த சித்ராவை பார்த்த அந்த பகுதியை சேர்ந்த பெண் அவரது குடும்பத்தாருக்கு தகவல் தெரிவித்திருக்கிறார்.
சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர்அந்தப் பெண் கொல்லப்பட்டதற்கான காரணம் குறித்து விசாரித்து வருகின்றனர்.






