சென்னையில் பழமையான 5 மாடி கட்டிடம் இடிந்து விழுந்தது..!
சென்னை ராயப்பேட்டையில் பழமையான 5 மாடி கட்டிடம் பெரும் சப்தத்துடன் திடீரென இடிந்து விழுந்துள்ளது. ராயப்பேட்டை பீட்டர் சாலையில் 45 ஆண்டுகள் பழமையான கட்டிடம் ஒன்று இருந்துள்ளது. சிதலமடைந்து காணப்பட்ட இந்த கட்டிடம் திடீரென இடிந்து விழுந்தது. அப்போது சாலையில் சென்ற மக்கள் அதிர்ச்சியடைந்தனர்.
4 தீயணைப்பு வாகனங்களில் வந்த வீரர்கள் மீட்பு பணியில் ஈடுபட்டனர். விபத்தின்போது கட்டிடத்தின் உள்ளே யாரும் இல்லாததால் உயிர் சேதம் தடுக்கப்பட்டுள்ளது. இந்த கட்டடத்தை காண ஏராளமானவர்கள் குவிந்ததால் சிறிது நேரம் அங்கு போக்குவரத்து நெரிசல் காணப்பட்டது.







