--- --:--:-- --

முதியவரை தெருவில் இழுத்து போட்டு தாக்கிய கொடூரம்..!

2

பெரம்பலூரில் முதியவர் ஒருவரின் வீட்டை அபகரிப்பதற்காக மூத்த மகனின் குடும்பத்தாரை அவரை தாக்கும் சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது. கடம்பலூர் எம்ஆர்பி நகரை சேர்ந்த ரங்கசாமி என்ற முதியவர் பல கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துக்களை அவரது மூத்த மகனான செல்வம் பறித்துக் கொண்டதாக கூறப்படுகிறது.

 

கந்தசாமி தனது இரண்டாவது மகன் கண்ணன் உடன் வாழ்ந்து வந்த நிலையில் அவரிடம், ரங்கசாமி தகராறு செய்த பதிலாக தெரிகிறது. கடந்த 19ஆம் தேதி முதியவரின் மூத்த மகன் செல்வம் அவரது மனைவியின் மலர்விழி மகன் கார்த்திக் ராஜா உள்ளிட்ட ஐந்து பேர் கொண்ட கும்பல் கண்ணன் வீட்டிற்கு சென்று தகராறு செய்துள்ளனர்.

 

ரங்கசாமியை வீட்டை விட்டு வெளியே இழுத்து வந்து சரமாரியாக தாக்கியுள்ளனர். காவல் நிலையத்தில் அளிக்கப்பட்ட புகாரின் பேரில் 5 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து தலைமறைவான செல்வம், கார்த்திக் ராஜா குடும்பத்தாரை காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர்.

 

இதனிடையே கணவர் தாக்கப்பட்ட சம்பவத்தை நேரில் கண்ட அதிர்ச்சியில் ரங்கசாமி மனைவி 20ம் தேதி உயிரிழந்தார்.

 

Right Menu Icon