--- --:--:-- --

அமைச்சர் துரைமுருகன் பேச்சுக்கு பிரேமலதா கண்டனம்..!

3

டாஸ்மாக் மது குறித்து சட்டப்பேரவையில் மூத்த அமைச்சர் துரைமுருகனின் பேச்சுக்கு தேமுதிக பொதுச் செயலாளர் கண்டனம் தெரிவித்துள்ளார். டாஸ்மாக் மதுவில் கிக் இல்லை என பேரவையில் துரைமுருகன் பேசியுள்ளதற்கு கண்டனம் தெரிவித்துள்ளார்.

 

மூத்த அமைச்சர் ஒருவர் முதலமைச்சரின் முன்னிலையில் பேரவையில் இப்படி பேசுவது கண்டனத்திற்குரியது என பிரேமலதா குறிப்பிட்டுள்ளார். துரைமுருகனின் பேச்சு அரசு தங்கள் நிலையை தாங்களை ஒப்புக் கொண்டுள்ளது என்பதாகத்தான் அர்த்தம் எனவும் பிரேமலதா கூறியுள்ளார்.

 

65 உயிர்களை இழந்து வாடும் மக்கள் அமைச்சர் துரைமுருகனின் பேச்சைக் கேட்டு பேரதிர்ச்சி அடைந்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். டாஸ்மாக் கடைகளை ஒழித்து போதையில்லாத தமிழகத்தை உருவாக்க வேண்டும் என்று கூறியுள்ள பிரேமலதா மதுவை கொடுத்து கோடிகளை சம்பாதிப்பதற்காக மக்களை இப்படி ஏமாற்றுவது ஏற்புடையது அல்ல எனவும் கூறியுள்ளார்.

 

Right Menu Icon