--- --:--:-- --

100 ரூபாய் லஞ்சம் தராததால் சிறுவனின் முட்டை வண்டியை சாலையில் கவிழ்த்துவிட்ட அதிகாரி..!

14

இந்தியாவில் ஊரடங்கின் போது பொது மக்கள் ஊரடங்கை மீறுவதாக போலீசார் ஏழை மக்களிடம் காட்டுமிராண்டி தனமாக நடந்து கொள்ளும் சம்பவங்கள் அரங்கேறி வருகின்றன. அது மாதிரியான நிகழ்வு மத்தியப் பிரதேச மாநிலத்தில் நடந்துள்ளது.

 

மத்தியப் பிரதேச மாநிலத்தில் இந்தூரில் லஞ்சம் சி றுவன் ஒருவன் சாலையோரம் முட்டை கடை நடத்தி வந்துள்ளான். அங்கு வந்த மாநகராட்சி அதிகாரி அவனிடம் லஞ்சம் கேட்டுள்ளார். லஞ்சம் கொடுக்காததால் சிறுவனின் தள்ளு வண்டியை மாநகராட்சி அதிகாரிகள் கவிழ்த்தியுள்ளனர்.

 

இதனால் அதிலிருந்த முட்டைகள் அனைத்தும் உடைந்து வீணாகியுள்ளதை சாலையில் உள்ள மக்கள் அனைவரும் பார்த்துள்ளனர். அது தொடர்பான வீடியோவும் வெளியாகியுள்ளது. இந்தூரில் சாலையோரம் தள்ளுவண்டியில் முட்டை விற்றுக்கொண்டிருந்த 14 வயது சிறுவனுடன் மாநகராட்சி அலுவலர் ஒருவர் 100 ரூபாய் லஞ்சம் கேட்டதாக கூறப்படுகிறது.

 

லஞ்சம் கொடுக்க சிறுவன் மறுத்ததால் முட்டை வைத்திருந்த தள்ளு வண்டியை அந்த அலுவலர் புரட்டி கவிழ்த்து விட்டார், இதனால் அதில் இருந்த நூற்றுக்கணக்கான முட்டைகள் அனைத்தும் உடைந்து வீணாகின. கொரொனா பரவலை தடுக்க விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகளை கடைபிடிக்க செயல்படுவதாக கூறி அரசு அலுவலர் ஒருவர் செய்த அட்டூழியம் சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.

Leave a Reply

Right Menu Icon