--- --:--:-- --

கோவிஷீல்டு தடுப்பூசியை வீட்டிற்கு எடுத்துச் சென்ற செவிலியர் பணியிடை நீக்கம்..!

3

கொரொனா தடுப்பூசியை வீட்டிற்கு எடுத்துச் சென்ற செவிலியரை நகராட்சி ஆணையர் பணியிடை நீக்கம் செய்து நடவடிக்கை மேற்கொண்டார். கஸ்தூரிபாய் தாய் சேய் நல விடுதி செவிலியராக பணிபுரிந்து வந்தவர் தனலட்சுமி.

 

இவர் மருத்துவமனையில் இருந்து 100 பேருக்கு செலுத்தும் வகையிலான கோவிஷீல்டு தடுப்பு மருந்துகளை வீட்டிற்கு எடுத்துச் சென்று மக்களுக்கு செலுத்தியதாக கூறப்படுகிறது.

 

இது தொடர்பாக தகவல் அறிந்த வேடசந்தூர் வட்டார மருத்துவர் மகேஸ்வரி தனலட்சுமி வீட்டிலிருந்த மருந்துகளை பறிமுதல் செய்து கரூர் நகராட்சி ஆணையர் ராமமூர்த்தியிடம் புகார் தெரிவித்துள்ளார். அந்த புகாரின் பேரில் நடவடிக்கை மேற்கொண்ட அதிகாரிகள் பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டார்.

Leave a Reply

Right Menu Icon