--- --:--:-- --

மழையால் கடும் பாதிப்படையும் மகாராஷ்டிர மாநில மக்கள்..!

4

பெரும் மழையால் கடும் பாதிப்பை சந்தித்துள்ள மகாராஷ்டிர மாநிலத்தில் மீட்பு பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. மகாராஷ்டிர மாநிலத்தில் கடந்த 10 நாட்களுக்கும் மேலாக பெய்து வருகிறது. கனமழையின் காரணமாக பல்வேறு பகுதிகளில் வெள்ளநீர் சூழ்ந்துள்ளது.

 

இதனால் மாநிலத்தில் உள்ள பல்வேறு ஆறுகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. மகாராஷ்டிராவின் பல மாவட்டங்களில் நிலச்சரிவு மற்றும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. ராய்காட் மாவட்டத்தில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 36 பேர் உயிரிழந்துள்ளனர்.

 

இதற்கு அருகில் உள்ள பகுதியில் மூன்று வெவ்வேறு நிலச்சரிவு சம்பவங்கள் நடந்துள்ளன. இந்தப் பேரிடரில் மொத்தம் 73 பேர் சடலமாக மீட்கப்பட்டுள்ளனர். மாயமான 47 பேரை தேடும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. நிலச்சரிவால் இதுவரை 112 பேர் உயிரிழந்துள்ளனர்.

 

ஒரு லட்சத்திற்கும் மேற்பட்டோர் பாதுகாப்பான இடங்களில் தங்க வைத்துள்ளனர். மீட்பு பணிகளில் 34 குழுக்கள் ஈடுபட்டுள்ளனர்.

Leave a Reply

Right Menu Icon