--- --:--:-- --

பிறந்து 14 நாட்களே ஆன குழந்தையின் பெருவிரலை துண்டாக்கிய செவிலியர்.!

1

ஞ்சாவூர் அரசு மருத்துவமனையில் பிறந்து 14 நாட்களே ஆன பெண் குழந்தையின் பெருவிரல்  செவிலியர் அலட்சியத்தால் துண்டானது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 

தஞ்சாவூர் மாவட்டம் காட்டூர் பகுதியை சேர்ந்த கணேசன் பிரியதர்ஷினி தம்பதிக்கு கடந்த 14 நாட்களுக்கு முன்பு பெண் குழந்தை ஒன்று பிறந்துள்ளது. 10 மாதத்திற்கு முன்பே குழந்தை பிறந்ததால் வயிற்றில் கோளாறு இருப்பதாக கூறி கையில் ஊசி மூலம் குளுக்கோஸ் ஏற்றியுள்ளனர்.

 

இதையடுத்து குழந்தையின் கையில் இருந்ததை அகற்றும்போது செவிலியரின் கவனக்குறைவால் கத்திரிக்கோல் வைத்து அகற்றிய போது குழந்தையின் கட்டை விரல் துண்டானது.

 

இதற்கு மருத்துவர்கள் விளக்கம் அளிக்காததால் செவிலியர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும், இதுபோல் இனிமேல் இதுபோன்ற தவறுகள் நடக்காதவாறு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Leave a Reply

Right Menu Icon