பிரியாமணி நடிப்பில் உருவாகும் திரைப்படம் 6 மொழிகளில் வெளியாகிறது..!
பிரியாமணி நடிப்பில் உருவாகும் கடைசி திரைப்படம் தமிழ், இந்தி உள்ளிட்ட ஆறு மொழிகளில் தயாராக உள்ளது. தமிழ், மலையாளம், தெலுங்கில் பல படங்களில் நடித்துள்ள பிரியாமணி பின்னர் அதிக அளவில் வாய்ப்புகள் இல்லாமல் இருந்தார்.
இந்த நிலையில் பாலாவின் உதவி இயக்குநர் இயக்கும் படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். மும்பையை களமாகக் கொண்டு உருவாகும் இந்த படம் திரில்லர் பாணியில் தயாராகிறது.







