அரசு பள்ளியில் புகுந்து தலைமையாசிரியர் மீது ஏறி அமர்ந்த குரங்குகள்..!
மத்திய பிரதேசத்தில் அரசு பள்ளியில் புகுந்து குரங்குகள் தலைமையாசிரியரின் நாற்காலியில் அமர்ந்து ஆசிரியர் ஒருவரின் தலையில் ஏறி சேட்டை செய்த வீடியோ வைரலாகி வருகிறது.
கொரொனா ஊரடங்கிற்குப் பிறகு குவாலியர் நகரில் உள்ள அரசு உயர்நிலைப் பள்ளியில் பதினொன்றாம் வகுப்பு மாணவர் சேர்க்கை நடைபெற்று வருகிறது.
இதனால் பள்ளி மாணவர்கள் மற்றும் பெற்றோர் வருகை தந்தபோது பள்ளி வளாகத்தில் உள்ள குரங்குகள் வேட்டையில் ஈடுபட்டனர். தலைமை ஆசிரியரின் இருக்கையிலும் ஆசிரியர் மீது ஏறி குங்கு அமர்ந்ததால் அங்கிருந்தவர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.






