ஒலிம்பிக்கில் தங்க பதக்கம் வெல்லும் வீரர், வீராங்கனைகளுக்கு 3 கோடி ரூபாய் பரிசு..!
ஒலிம்பிக்கில் பதக்கம் வெல்லும் இந்திய வீரர் வீராங்கனைகளுக்கு இந்திய ரயில்வே அமைச்சகம் பரிசுத்தொகையை அறிவித்துள்ளது.
ஒலிம்பிக்கில் தங்க பதக்கம் வெல்லும் இந்திய வீரர் வீராங்கனைகளுக்கு மூன்று கோடி ரூபாயும், வெள்ளி பதக்கம் வெல்லும் வீரர் வீராங்கனைகளுக்கு 2 கோடி ரூபாயும், வெண்கலப் பதக்கம் வெல்லும் வீரர் வீராங்கனைகளுக்கு ஒரு கோடி ரூபாயும் வழங்கப்படும் என்று இந்திய ரயில்வே அமைச்சகம் அறிவித்துள்ளது.
இந்தியன் ரயில்வேயில் இருந்து ஒலிம்பிக் போட்டியில் 20 வீரர்-வீராங்கனைகள் கலந்து கொண்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.






