உணவு பொட்டலம் என நினைத்து பணத்தை தூக்கி சென்ற குரங்கு..!
மத்திய பிரதேசத்தில் ஒரு லட்சம் ரூபாய் பணத்தை உணவு பொட்டலம் என நினைத்து தூக்கி சென்ற குரங்கு வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் மீது பண மழை பொழிந்தது.
மத்தியபிரதேசம் ஜபல்பூர் மாவட்டத்தை சேர்ந்த நபர் ஒரு லட்சம் ரூபாய் ரொக்கப் பணத்தை தனது துண்டில் மடித்து ஆட்டோ ரிக்ஷாவில் வைத்துள்ளார். அப்போது மின்னல் வேகத்தில் வந்த குரங்கு பணத்தை உணவு பொட்டலம் என நினைத்து தூக்கி சென்றது.
மரத்தின் மீது அமர்ந்த குரங்கிடம் பணத்தை பறி கொடுத்தவர் இரு கரங்களையும் நீட்டி கெஞ்ச துவங்கினார். உணவு இல்லாததால் ரூபாய் நோட்டுகளை மரத்திலிருந்து கீழே போட்டதில் காற்றில் பறந்த பணம் வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் மீது விழுந்தது. 10 ஆயிரம் ரூபாய் மட்டுமே உரியவரிடம் ஒப்படைக்கப்பட்டது.







