உடற்பயிற்சி செய்த முதியவர் ஜிம்மில் உயிர் போன தருணம்..!
மகாராஷ்டிரா மாநிலத்தில் ஜிம்மில் உடற்பயிற்சி செய்து கொண்டிருந்த 67 வயது முதியவர் மயங்கி விழுந்து உயிரிழந்தார். பாலகரு மாவட்டத்திலுள்ள நகரில் இயங்கி வரும் ஜிம்மில் பிரகலாத் நிகல் என்பவர் இரவு 7.30 மணியளவில் வழக்கம் போல் உடற்பயிற்சி செய்து கொண்டிருந்த பொழுது திடீரென மயங்கி கீழே விழுந்து உயிரிழந்ததாக போலீசார் தெரிவித்தனர்.
மரணத்திற்கான காரணம் இதுவரை தெரியவில்லை எனவும் பிரேத பரிசோதனைக்காக அவரது உடல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டதாகவும் போலீசார் தெரிவித்தனர்.






