--- --:--:-- --

3 பெண்களை திருமணம் செய்த ஆட்டோ டிரைவர் அடித்து கொலை..!

5

சென்னை வியாசர்பாடியில் 3 பெண்களை திருமணம் செய்திருந்த ஆட்டோ டிரைவர் ஒருவர் குடிபோதையில் தகராறில் ஈடுபட்ட போது கிரிக்கெட் மட்டையால் அடித்து கொலை செய்யப்பட்டார்.

 

வடிவேல் என்ற அப்புராஜின் மனைவி தேவி சில ஆண்டுகளுக்கு முன் பிரிந்து சென்றுவிட சரண்யா மற்றும் சந்தியா ஆகிய மற்ற இரு மனைவிகளும் ஞாயிற்றுக்கிழமை சண்டை போட்டு விட்டு பிரிந்து விட்டனர். மனைவிகள் இருவரும் தம்மிடமிருந்து பிரிந்து சென்றதற்கு அதே பகுதியை சேர்ந்த வேலுச்சாமி யும் அவரது மகன் ரவீஷ்வரனும் காரணம் எனக்கூறி அப்பனுராஜ் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.

 

இதில் ஆத்திரமடைந்த தந்தையும் மகளும் சேர்ந்து கிரிக்கெட் மட்டையால் தலையில் தாக்கியதில் அவர் நிகழ்விடத்தில் உயிரிழந்தார். பின்னர் இருவரும் எம்கேபி நகர் போலீசில் சரணடைந்தனர்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon