--- --:--:-- --

வழக்கறிஞர் சரமாரியாக வெட்டி படுகொலை.. ராணுவ வீரரின் வெறிச்செயல்..!

5

தென்காசி மாவட்டத்தில் இடத் தகராறு காரணமாக வழக்கறிஞர் உட்பட இருவர் வெட்டி படுகொலை செய்யப்பட்டனர். ஆலங்குளம் அருகே உள்ள மேட்டூர் என்ற இடத்தைச் சேர்ந்தவர் அசோக்குமார்.

 

இவருக்கும் பக்கத்து வீட்டைச் சேர்ந்த ராணுவ வீரர் சுரேஷ் என்பவருக்கும் இடையே இடத்தகராறு இருந்து வந்தது. இந்த நிலையில் விடுமுறையில் ஊருக்கு வந்திருந்த ராணுவ வீரர் சுரேஷுக்கும் அசோக்குமாருக்கும் இடையே நேற்று இரவு மீண்டும் தகராறு ஏற்பட்ட நிலையில் ஆத்திரமடைந்த சுரேஷ் அறிவாளால் சரமாரியாக வெட்டியது.

 

அசோக்குமார் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தார். அதனை தடுக்க வந்த அசோக்கின் பெரியப்பா துரைராஜ் என்பவரையும் சுரேஷ் வெட்டியதில் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்த சம்பவம் தொடர்பாக ராணுவ வீரர் சுரேஷை போலீசார் தேடி வருகின்றனர்.

 

Right Menu Icon