ஆம்புலன்ஸ் வருவது கூட தெரியாமல் அரசு பேருந்து ஓட்டுனரின் அலட்சியம்..!
தேனி மாவட்டம் பெரியகுளத்தில் இருந்து தேனி சென்று அரசு பேருந்து ஓட்டுனர் செல்போனில் பேசியபடியே வாகனத்தை இயக்கி சென்றதால் பயணிகள் அதிர்ச்சி அடைந்தனர். அப்பொழுது ஆம்புலன்ஸ் வருவதை கூட கவனிக்காமல் அவர் சென்றுள்ளார்.
இதனால் பயணிகள் அவர் பேசிக்கொண்டே பேருந்து இயக்கிய காட்சிகளை செல்போனில் பதிவு செய்து வெளியிட்டுள்ளனர். இதனைத் தொடர்ந்து ஓட்டுனர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளனர்.





