மனைவியின் காதில் இருந்த கம்மலை காதோடு அறுத்து சென்ற நிகழ்வு..!
திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூரில் குடிக்க பணம் கேட்டு மனைவியின் காதில் இருந்த கம்மலை காதோடு கணவர் அறுத்து சென்ற நிகழ்வு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பாப்பம்பட்டி தெருவை சேர்ந்த பாலசுப்பிரமணியன் என்பவர் மதுப்பழக்கத்திற்கு அடிமையாகி எப்போதும் குடித்து வந்ததாக கூறப்படுகிறது.
தற்போது தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கில் மது கடைகள் திறக்கப் பட்டிருக்கும் நிலையில் தனது மனைவியை அடித்து குடிப்பதற்காக பாலசுப்பிரமணியம் பணம் கேட்டு வந்ததாக சொல்லப்படுகிறது. அவர் பணம் தர மறுத்ததால் ஆத்திரமடைந்த அவர் தங்கமணி காதில் போட்டு இருக்கும் கம்மலை காதோடு சேர்ந்து அறுத்து சென்றுள்ளார்.
வழியில் துடித்தவாறு நேராக வேடசந்தூர் காவல் நிலையத்திற்கு புகார் கொடுக்க வந்த நிலையில் உடனடி மருத்துவம் தேவை என வலியுறுத்தி அவரை மருத்துவமனைக்கு போலீசார் அனுப்பி வைத்தனர்.






