விநாயகர் சிலைகளுக்கு கட்டுப்பாடு விதித்து உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு..!
மாசு கட்டுப்பாட்டு வாரியத்தின் விதிமுறைகளை பின்பற்றி விநாயகர் சிலைகள் செய்யப்படுகிறதா என்று உயர் நீதிமன்ற மதுரை கிளை கேள்வி எழுப்பிள்ளது. இந்த வழக்கு தலைமை நீதிபதி அவர்கள் விசாரணைக்கு வந்தது.
அப்பொழுது ரசாயனம் பயன்படுத்தி விநாயகர் சிலைகள் செய்யக்கூடாது என பசுமை தீர்ப்பாயம் உத்தரவு பிறப்பித்துள்ள நிலையில் எவ்வாறு அனுமதிக்கப்படுகிறது என்று நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.
மேலும் பசுமை தீர்ப்பாயம், மாசு கட்டுப்பாட்டு வாரியம் விதித்துள்ள விதிமுறைகள் பின்பற்றப்படுகிறதா என்பது குறித்து இன்று பதில் அளிக்குமாறு நீதிபதிகளும் உத்தரவிட்டனர்.






