இறந்தும் 5 பேரை வாழ வைத்த பெண்..!
சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் மூளை சாவடைந்த பெண்ணின் உடல் உறுப்புகள் ஐந்து பேருக்கு தானமாக அளிக்கப்பட்டுள்ளது.
வேலூர் மாவட்டத்தைச் சேர்ந்த 36 வயது பெண் சாலை விபத்தில் படுகாயம் அடைந்த நிலையில் சென்னை ராஜீவ் காந்திய அரசு மருத்துவமனையில் மூளை சாவடைந்தார். இதனையடுத்து அவரது உடல் உறுப்புகள் குடும்பத்தினரிடம் ஒப்புதல் உடன் தானமாக பெறப்பட்டது.
தானமாக பெறப்பட்ட கல்லீரல், அதே மருத்துவமனையில் சிகிச்சை பெறும் பெண் நோயாளிக்கு பொருத்தப்பட்டது. சிறுநீரகங்கள், கண்கள் விடுத்த மற்ற உறுப்புகள் வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெறும் நான்கு பேருக்கு பொருத்தப்பட்டது.
உறுப்பு கொடை அளித்த சத்யாவிற்கு மருத்துவர்கள் ஊழியர்கள் என அனைவரும் நீண்ட வரிசையில் நின்று அஞ்சலி செலுத்தியது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.






