--- --:--:-- --

தாலி கட்டும் நேரத்தில் ஓடிய மாப்பிள்ளை.. 20 கிலோமீட்டர் துரத்தி சென்று பிடித்த பெண்..!

8

தாலி கட்டும் நேரத்தில் ஓட்டம் பிடித்த மாப்பிள்ளையை 20 கிலோமீட்டர் தூரம் துரத்தி சென்று தூக்கிவந்த மணமகள் தனக்கு தாலி கட்ட செய்த சம்பவம் உத்திரபிரதேசத்தில் அரங்கேறியுள்ளது . உத்தர பிரதேச மாநிலத்தை சேர்ந்த பெண் ஒருவர் அதே பகுதியை சேர்ந்த இளைஞரை காதலித்துள்ளார்.

 

இரண்டு ஆண்டுகளுக்கு மேலாக காதலித்தவர்களுக்கு இருவீட்டார் சம்மதத்துடன் திருமணத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது. ஆனால் திருமண நாளன்று மாப்பிள்ளை திருமணம் நடக்கும் இடத்திலிருந்து தப்பி ஓடி விட்டார்.

 

நேரம் செல்ல செல்ல சந்தேகம் அடைந்த மணப்பெண் மாப்பிள்ளையை செல்போனில் தொடர்பு கொண்டு திருமணத்திற்கு இன்னும் இரண்டு மணி நேரம் இருக்கும் நிலையில் எங்கு சென்றாய் என கேட்டுள்ளார். திருமணத்திற்கு தனது தாயாரை அழைக்க சென்றுள்ளேன் என மாப்பிள்ளை சமாளித்துள்ளார்.

 

ஆனால் அதை நம்பாத மணப்பெண் மாப்பிள்ளை தேட ஆரம்பித்தார். சுமார் 20 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள பேருந்து நிலையத்தில் மாப்பிள்ளை அமர்ந்திருப்பதை கண்டுபிடித்தார். அதே நேரத்தில் கோயிலுக்கு மாப்பிள்ளையை தூக்கி சென்ற மணப்பெண் அங்கேயே தாலி கட்ட வைத்துள்ளார்.

 

Right Menu Icon