--- --:--:-- --

சாலையில் கிடந்த 10 ஆயிரம் ரூபாய் பணத்தை தலைமை ஆசிரியையிடம் ஒப்படைத்த சிறுமிகள்.!

7

சென்னை பெரம்பூரில் கீழே கிடந்த பத்தாயிரம் ரூபாய் பணத்தை போலீசாரிடம் அரசுப் பள்ளி மாணவிகள் ஒப்படைத்தனர்.

 

சென்னை பெரம்பூர் வீனஸ் மார்க்கெட் பகுதியில் உள்ள அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் 12-ம் வகுப்பு படித்து வரும், மூன்று மாணவிகளும் பள்ளி முடிந்து வீடு திரும்பிக்கொண்டிருந்த போது பணம் கீழே கிடப்பதைப் பார்த்து பள்ளி தலைமை ஆசிரியையிடம் ஒப்படைத்துள்ளார்.

 

ஆசிரியர் அதனை இன்ஸ்பெக்டரிடம் ஒப்படைத்துள்ளார். இதையடுத்து இன்ஸ்பெக்டர் கோமதி அந்த பள்ளிக்கு நேரில் சென்று 3 மாணவிகளையும் பாராட்டி சன்மானமாக ஐநூறு ரூபாய் பணம் கொடுத்து கவுரவித்தார்.

 

Right Menu Icon