கண்களை கட்டிக்கொண்டு ரூபாய் நோட்டில் இருக்கும் எண்ணை சரியாக சொல்லும் மாணவி!
தூத்துக்குடி மாவட்டம் ஆறுமுகநேரி அடுத்துள்ள கமலாவதி பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு படித்து வரும் பவித்ரா என்பவர் தான் தனது கண்களைத் துணியால் மூடிக்கொண்டு உள்ளதை உள்ளபடியே அடையாளம் காட்டும் அதிசய மாணவி.
ரூபாய் நோட்டுகளையும் ஆதார் கார்டையும் தடவி பார்த்து அடையாளம் காட்டிய மாணவி பவித்ரா. புத்தகங்களில் என்ன பிரிண்ட் செய்யப்பட்டுள்ளது என்பதையும் சரளமாக சொல்லி மலைக்க வைக்கிறார். கணக்கு பாடம் சொல்லித்தரும் ஆசிரியைகளை ஒரு தொடுதலில் அடையாளம் கண்டு சொன்னது ஆச்சரியமாக இருந்தது.
ஆசிரியர் ஒருவரை தொடாமலேயே அவர் அணிவிக்கும் முறை சட்டைப் பையில் வைத்திருக்கும் பேனா முடிவில் வண்ணம் வரை அப்படியே தெரிவித்து அனைவரையும் அசர வைத்தார்.
மாணவி பவித்ரா தனது இந்த அபூர்வ சக்திக்கு தான் சிறுவயது முதலே கற்றுவரும் யோகா கலை தான் முக்கிய காரணம் என்றும், பிரஹ்ம யோகாவை தினமும் 5 நிமிடங்கள் செய்வதால் தான் கண்களை மூடிக் கொண்டிருக்கையில் நெற்றிக்கண் என சொல்லக்கூடிய ஞானக்கண் மூலம் முன்னாள் இருக்கக்கூடிய அனைத்தையும் தன்னால் பார்க்க முடிவதாக கூறுகிறார்.





