தனது நாய்க்குட்டியை காப்பாற்ற கரடியை எதிர்த்து போராடிய சிறுமி..!
அமெரிக்காவில் 17 வயது சிறுமி செல்லமாக வளர்த்து வரும் நாய்களை காப்பாற்றுவதற்காக கரடியை எதிர்த்து போராடும் துணிச்சலான காட்சிகள் வெளியாகியுள்ளது. கலிஃபோர்னியாவில் உள்ள வீட்டின் சுவற்றில் கரடி தன் குட்டியுடன் நடந்து சென்றுள்ளது.
அப்போது வீட்டில் இருந்த நாய்கள் கரடியைப் பார்த்து குரைக்க கரடி தாக்க முயற்சித்து இருக்கிறது. உடனடியாக வீட்டில் இருந்த சிறுமி ஓடி வந்து கரடியை கீழே தள்ளிவிட்டு தனது நாய்களை காப்பாற்றிக் கொண்டு சென்றுள்ளார்.
இந்த காட்சிகள் அனைத்தும் அங்கிருந்த கேமராவில் பதிவாகியுள்ளது. கரடியை தனது செல்லப்பிராணிக்காக தள்ளிவிட்ட சிறுமிக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.






