--- --:--:-- --

கண்களை கட்டிக்கொண்டு சைக்கிள் ஓட்டி சாதனை படைத்த சிறுமி..!

10

நெல்லையில் போக்குவரத்து மிகுந்த சாலையில் பதினோரு வயது சிறுமி ஒருவர் கண்களை கட்டிக்கொண்டு சைக்கிள் ஓட்டி சாதனை படைத்து வருகிறார்.

 

வண்ணாரப் பேட்டையைச் சேர்ந்த கார்த்தி தேவிப்பிரியா தம்பதியினரின் ஒரே மகளான பிரிஷ்யா ஒரு வயது முதலே யோகா கலையின் திறன் பெற்று 11 வயதில் நாற்பத்தி ஒரு உலக சாதனைகளை தனதாக்கி உள்ளார்.

 

இந்த நிலையில் சாதனை பட்டியலின் அடுத்தகட்ட முயற்சியாக கண்களை கட்டிக் கொண்டு தினமும் காலை தனது வீட்டில் இருந்து சில கிலோ மீட்டர் தூரத்திற்கு சைக்கிள் ஓட்டி வருகிறார். போக்குவரத்து மிகுந்த சாலையில் எந்தவித அச்சமுமின்றி சிறுமி சைக்கிள் ஓட்டுவது காண்பவரை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.

 

Leave a Reply

Right Menu Icon