எம்.எல்.ஏ திருமகன் ஈவேரா உடலுக்கு இன்று பிற்பகல் இறுதி சடங்கு..!
மாரடைப்பால் உயிரிழந்த ஈரோடு கிழக்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் திருமகன் ஈவேரா உடலுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் நேரில் அஞ்சலி செலுத்தினார். ஈரோடு கிழக்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினரும், தமிழக காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் இளங்கோவனின் மகனுமான திருமகன் ஈவேராவுக்கு மாரடைப்பு ஏற்பட்டது.
பின் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்த நிலையில் முதலமைச்சர் ஸ்டாலின் நேரில் சென்று அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்தினார். அதனைத் தொடர்ந்து இவிகேஎஸ் இளங்கோவனுக்கு முதலமைச்சர் ஆறுதல் கூறினார்.
மேலும் காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள், பிற அரசியல் கட்சியை சேர்ந்த பலரும் திருமகன் ஈவேரா உடலுக்கு அஞ்சலி செலுத்தினார். கடந்த 2021 ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டப்பேரவை தேர்தலில் ஈரோடு கிழக்கு தொகுதியில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்ட திருமகன் ஈவேரா முதல் முறையாக எம்எல்ஏ ஆனார்.






