--- --:--:-- --

தரையிலிருந்து திடீரென பொங்கி வந்த ஊற்று..!

12

திருப்பூரில் குடிநீர் குழாய் உடைந்ததால் 20 அடி உயரத்திற்கு பீச்சி அடித்த தண்ணீர் ஆறு போல் பெருக்கெடுத்து ஓடியது. திருப்பூர் மாவட்டத்தில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் பல்வேறு பணிகள் நடைபெற்று வருகிறது.

 

இந்த நிலையில் கொங்கு மெயின் ரோடு பகுதியில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்திற்கு குழாய்கள் தோண்டப்பட்ட போது குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டது. இதனால் 20 அடி உயரத்திற்கு தண்ணீர் பீச்சி அடித்ததுடன் சாலையில் ஆறுபோல் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது.

 

இதுகுறித்து அந்த பகுதி மக்கள் மாநகராட்சி அதிகாரிகளுக்கு புகார் அளித்ததை தொடர்ந்து அங்கு வந்த ஊழியர்கள் குழாய் அடைப்பை சரி செய்தனர்.

 

Right Menu Icon