--- --:--:-- --

சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி 70 வேட்பாளர்கள் அடங்கிய முதல் பட்டியல் வெளியீடு..!

7

சாம் சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி 70 வேட்பாளர்கள் அடங்கிய முதல் பட்டியலை பாரதிய ஜனதா கட்சி வெளியிட்டுள்ளது. 126 தொகுதிகளை கொண்ட அசாம் மாநிலத்தில் வரும் 27-ஆம் தேதி தொடங்கி 3 கட்டங்களாக தேர்தல் நடைபெற உள்ளது.

 

ஆட்சியில் உள்ள பாரதிய ஜனதா கட்சி மீண்டும் வெற்றி பெறுவதற்கான வியூகங்களை வகுத்து வரும் நிலையில் அந்தக் கட்சியின் பொதுச்செயலாளர் அருண் சிங் முதல் வேட்பாளர் பட்டியலை வெளியிட்டுள்ளார்.

 

அதில் முதல் அமைச்சர் சர்பானந்த சோனோவால் மஜ்லி
தொகுதியிலும், அமைச்சர் ஹூமாந்தா விஷ்வா சர்மா அலுக்வாரி தொகுதியிலும் போட்டியிடுகிறார் என அறிவிக்கப்பட்டுள்ளது.

 

தற்போது பதவியில் உள்ள 11 சட்டமன்ற உறுப்பினர்களுக்கு மீண்டும் போட்டியிட வாய்ப்பு வழங்கப்படாத நிலையில் பல புதிய நபர்களுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Right Menu Icon